வீதியில் விவசாயிகள்!இலங்கை அரசு மீன்பிடி மற்றும் விவசாய நடவடிக்கைகளிற்கு தேவையான மண்ணெயின் விலையினை மூன்று மடங்கினால் அதிகரித்துள்ளது.

ஒரு லீற்றர் மண்ணெய் 87 ரூபாயாக இருந்த நிலையில் நேற்றிரவு முதல் 253ரூபா அதிகரிப்பினால் புதிய விலை 340 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதனிடையே கிளிநொச்சியில் விவசாயிகள் பெரும் போக அறுவடைக்கு டீசல் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டமொன்றை இன்று முன்னெடுத்துள்ளனர். இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட மாவட்ட செயலகம் முன்னதாக விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.


No comments