கார் குண்டுவெடிப்பில் புடினின் மூளையாகச் செயற்பட்டவரின் மகள் உயிரிழப்பு


ரஷ்ய அதிபர் புடினின் முக்கிய ஆலோசகரான அலெக்சாண்டர் டக்கினை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் அவரது மகள் கொல்லப்பட்டார்.

உக்ரைன் படையெடுப்பில் புடினின் மூளையாக செயல்பட்டவர் அலெக்சாண்டர் டக்கின் (Alexander Dugin). இவரை புடின் மூளை என்று குறிப்பிடுவார்கள். இவர் செல்வாக்கு மிக்க ரஷ்ய தேசியவாத சித்தாந்தவாதியாவார். ரஷ்யாவின் படையெடுப்பு மற்றும் உக்ரைனின் சாத்தியமான இணைப்பின் தீவிர ஆதரவாளரும் ஆவார்.

பத்ரிக்கையாளராவும், அரசியல் விமர்சகராகவும் பணியாற்றிவந்த 29 வயதான அவரது மகள் டார்யா டகினா (Darya Dugina), மொஸ்கோவின் புறநகர்ப் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு தனது காரில் செல்லாமல் தந்தையின் Toyota Land Cruiser காரில் வீடு திரும்பியுள்ளார்.

அப்போது அந்த காரில் முன்கூட்டிய பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

துகினா தனது தந்தையுடன் கலந்து கொண்ட கலாசார விழாவில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

No comments