அடுத்தவாரம் கோட்டா நாடு திரும்புவார் - உதயங்க வீரதுங்க


இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

எம்.ஐ.ஜி ஒப்பந்தம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இக்கருத்தினை வெளியிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:-

முன்னாள் ஜனாதிபதி நாட்டுக்கு சேவையாற்றுவார் என  உதயங்க வீரதுங்க தெரிவித்தார்.

பொறுப்புடன் சொல்கிறீர்களா என்று கேட்டபோது ஊடவியலாளர் கேள்வி எழுப்பியபோது 

இன்று பொறுப்புடன் சொல்கிறேன் திகதி மாறலாம். பின்னர் அவர் திகதியை மாற்றினால் என்னால் உதவ முடியாது என்றார்.

கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலில் ஈடுபடுவாரா என வினவியபோது, ​​அவர் ஒரு புத்திசாலி அரசியல்வாதி அல்ல, புத்திசாலித்தனமான அதிகாரி என்றார். 

எங்கள் மக்கள் மீண்டும் முட்டாள்களாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அரசியல்வாதியாக அவர் புத்திசாலி இல்லை. அவர் ஒரு புத்திசாலி இராணுவ அதிகாரி. மகிந்த ராஜபக்சவிடம் இருக்கும் எந்த ஒரு குணமும் அவரிடம் இல்லை. 

அதனால்தான் அவர் எல்லாவற்றையும் தவறாகப் புரிந்து கொண்டார், என்று உதயங்க வீரதுங்க மேலும் கூறினார்.

No comments