வாவிக்குள் தள்ளியவர் கைதாம்!கொழும்பில் கடந்த மே மாதம் 9ஆம் திகதி காலி முகத்திடல் பகுதியில் இடம்பெற்ற வன்மறை சம்பவங்களின் போது, அம்பலாங்கொடை பிரதேசசபை உறுப்பினர் ஒருவரின் பணப் பையை கொள்ளையிட்டு, அவரை பேர வாவிக்குள் தள்ளிய ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொம்பனித் தெரு பகுதியில் வைத்து  கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே மாதம் 9ஆம் திகதி குறித்த பிரதேசசபை உறுப்பினர் பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருந்த போது, கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் உள்ளிட்ட சிலர், கொள்ளுப்பிட்டி பகுதியில் வைத்து, பஸ்ஸிலிருந்து பிரதேசசபை உறுப்பினரை கீழிறக்கி அவரிடமிருந்த பணத்தை கொள்ளையிட்ட பின்னர், அவரை பேர வாவிக்குள் தள்ளியுள்ளனர்.

No comments