வல்வெட்டித்துறை நகரசபை:ஒரு ஆசன உறுப்பினர் தவிசாளரானார்!ஒரு ஆசனத்தை மட்டுமே கொண்டிருந்த ரணில் கொழும்பில் ஜனாதிபதியாக ஒரு ஆசனத்தை மட்டுமே கொண்டிருந்த தமிழர் விடுதலைக்கூட்டணி பிரதிநதிநி வல்வெட்டித்துறை நகரசபையின் தவிசாளர் பதவியை ஏற்றுள்ளார்..

ஈபிடிபி,சுதந்திரக் கட்சி, சுயேட்சை ஆதரவுடன் தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர் ஆர்.சுரேன் வல்வை நகரசபை தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சுமந்திரனின் அணியின் உறுப்பினரான மயூரன் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.கூட்டமைப்பின் விகிதாசார உறுப்பினராக நியமிக்கப்பட்ட இவர் கடந்தமுறையும் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை . ரெலோவை தோற்கடிக்கவேண்டும் என்பதற்காக சுமந்திரன் அணியால் பின்னப்பட்ட சதியில் கூட்டமைப்பு வசமிருந்த வல்வெட்டித்துறை நகரசபை இழக்கப்பட்டுள்ளது.No comments