பிரான்சில் கடும் மழை!!


பிரான்சில் நேற்று செவ்வாய்கிழமை இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது. மாலை தலைநகர் பரிசில் ஒன்றரை மணி நேர மழை கொட்டியது.

மாலை 7 மணியளவில், 90 நிமிட இடைவெளியில் 40 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்ததாக பிரெஞ்சு தேசிய வானிலை சேவையான தெரிவித்துள்ளது.

இது கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் பொதுவாக விழும் தொகையில் 70% என கூறப்பட்டுள்ளது.

மழை பெய்ததால் தலைநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறிது நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

மேட்ரோ என்று அழைக்கப்படும் நிலக்கீழ் சுரங்க தொடருந்து நிலையங்களுக்குள் மழை நீர் சென்றுள்ளது. இதேநேரம் வீதியில் பயணிந்த பேருந்துகளுக்குள்ளும் மழை வெள்ளம் சென்றுள்ளது.
No comments