விகாரைக்காவது அனுமதியுங்கள்:கெஞ்சும் கோத்தா!



தாய்லாந்தில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள கோத்தபாய வழிபாட்டிற்கு விகாரைகளிற்கு செல்லவாவது அனுமதிக்குமாறு தாய்வான் ஆட்சியாளர்களை கோரியுள்ளார்.

 மக்களின் எதிர்ப்பால் மாலைதீவுக்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பின்னர் அங்கிருந்து சிங்கப்பூருக்கு சென்று தஞ்சம் புகுந்தார். தற்போது தாய்லாந்து சென்று தங்கியுள்ள அவருக்கு அந்நாட்டு அரசாங்கத்தால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

இந்த நிலையில், தாய்லாந்து அரசாங்கத்திடம் அங்குள்ள உள்ள மதஸ்தலங்களுக்கு சென்று வழிபட கோட்டாபய ராஜபக்ச அனுமதி கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தாய்லாந்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ள அவர், அந்த ஹோட்டலை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என தாய்லாந்து அரசின் அறிவித்தலின் அடிப்படையில் பொலிசார் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இலங்கை அரசின் வேண்டுகோளுக்கு இணங்க, அவர் தாய்லாந்தில் சுமார் 3 மாதங்கள் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டுள்ளார். 

ஆனால், அங்கிருந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது எனவும், நாட்டுக்கு பிரச்சினையான நடத்தைகளில் இருந்து விலகியிருக்க வேண்டும் எனவும் அந்நாட்டு அரசாங்கம் நிபந்தனைகளை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments