ஜோசப் ஸ்டாலின் விடுதலையை வலியுறுத்தி யாழில் ஆர்ப்பாட்டம்!இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட ஜனநாயக போராளிகளின் விடுதலையை வலியுறுத்தியும், ரணில் அரசாங்கத்தின் அரச பயங்கரவாதத்தைக் கண்டித்தும் இன்று யாழ்ப்பாணப் பேருந்து மத்திய நிலையத்தின் முன்னால்  மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் பாடசாலைகளில் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கபட்டிருந்த நிலையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

போராட்டத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் நாடாளுமன் உறுப்பினர்கள் இருவரும் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.No comments