அமைதிப்படைக்கு அஞ்சலி:கூட்டமைப்பு,காங்கிரஸ் பிரசன்னம்!

இந்தியா சுதந்திரமடைந்து 75வது ஆண்டு நிகழ்வை முன்னிட்டு நேற்று திங்கட்கிழமை காலை பலாலியில் அமைந்துள்ள இந்திய அமைதி காக்கும் படையினரின் நினைவிடத்தில், யாழ். இந்தியத் துணைத் தூதுவர் ராகேஸ் நட்ராஜ், யாழ்ப்பாணப் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி சார்பில் மேஜர் ஜெனரல் விஜயசுந்தர இணைந்து மலரஞ்சலி செலுத்தியுள்ளனர். 


தனிடையே இந்தியாவின் நிதி உதவியில் கட்டப்பட்ட யாழ்ப்பாண பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற  மாலை நிகழ்வில் வடக்கு  மாகாண ஆளுநர் மற்றும்  வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர், கூட்டமைப்பு மற்றும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், யாழ் மாநகர முதல்வர், மூத்த அரச அதிகாரிகள், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள், அரசியல் மற்றும் மதத் தலைவர்கள், கல்வியாளர்கள், இந்தியக் குடிமக்கள், இந்திய வம்சாவளியினர், துணைத் தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உட்பட சுமார் 400 இற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டதாக தூதரக ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments