அரைகுறையில் நின்றது அமைச்சருடைய ரயில்!
தமிழ் அமைச்சரும் அவரது தொண்டரடிப்பொடிகளும் ஆஹா ஒஹோ அழைத்து வந்த யாழ்.ராணி இஞ்சின் முழுமையாக கைவிட்டதினால், பளையுடனேயே அனைவரையும் இறக்கி இன்று மாலை கைவிட்டுள்ளது.அத்துடன் ஒருவாறாக மேற்கொண்டு ஊர்ந்து சென்று கொடிகாமம் ரயில் நிலையத்தில் முழுமையாக கைவிட்டுள்ளதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.
யாழ் ராணியில் வந்த பயணிகள் அனைவரும் பின்னால் வந்த உத்திர தேவி ரயிலில் பயணம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
யாழ்.ராணியில் இஞ்சின் உலகத்தில் எங்கும் பயன்படுத்தக்கூடிய நிலையில் இல்லாததொன்றை ஓட்டிய பெருமை அமைச்சரையும் தொண்டர்களையுமே சேருமென்கிறினர் பயணிகள்.
இன்றைய பயணம் பற்றி கருத்து தெரிவித்த பெண் பயணி தூர இடத்துக்குச் செல்லும் பெண்கள் எல்லாம் பாவங்கள். அதுகும் கொடிகாமத்தில் மேடை தாண்டி நிற்பாட்டிய ரயிலில் இருந்து செங்குத்தாக இறங்கி உடனடியாக மேடையில் ஏறி மாறுவதற்கு பல பெண்கள் சிரமம்பட்டனர். வேலை நாளில் பெரும்பகுதி பயணத்தில் கழிவது எவ்வளவு அபத்தம். உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.
Post a Comment