ஈருறுளித் திருடன் பிடிபட்டான்: 18 ஈருறுளிகள் மீட்பு


மட்டக்களப்பு நகரில் ஈருறுளிகளைத் திருடிவந்த காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவரை நேற்று வியாழக்கிழமை (07) காவல்துறையினர் கைது செய்ததுடன் திருடப்பட்ட 18 ஈருறுளிகளையும் மீட்டுள்ளனர்.

மட்டு அரசடிபகுதியில் உள்ள தனியார் கம்பனி ஒன்றிற்கு முன்னால் நேற்று வியாழக்கிழமை நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஈருறுளியை ஒருவர் திருடும் போது அந்த தனியார் கம்பனி பணியாட்கள் குறித்த திருடனை மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர் 

தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தினமும் காத்தான்குடியில் இருந்து பேருந்தில் பயணித்து  மட்க்களப்பு நகருக்கு வந்து அங்கு வீதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஈருறுளிகளைத் திருடிக் கொண்டு சென்று அதனை காத்தான்குடி பிரதேசத்தில் 17 ஆயிரம் ரூபா தொடக்கம் 25 ஆயிரம் வரைவில் விற்பனை செய்துள்ளதாகவும் திருட்டில் ஈடுபட்டவர் தெரிவித்துள்ளார்.

சில ஈருளிறுகளைத் கழற்றி பாகங்களாக விற்பனை செய்துள்ளதாகவும் போதைவஸ்துக்கு அடிமையான நிலையில் அதற்கு பணத் தேவைக்காக ஈருறுளிகளைத் திருடி விற்பனை செய்துள்ளதாக  ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது 

இதனையடுத்து திருடப்பட்டு விற்பனை செய்யப்பட்ட 18 துவிச்சக்கரவண்டிகளை மீட்டுள்ளதுடன் குறித்த நபரை இன்று 08 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நீதிமன்றில் முன்னலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதேநேரம் ஈருறுளிகளைத் திருட்டுக் கொடுத்தவர்கள் காவல்நிலையத்திற்குச் சென்று ஈருளிறுகளை அடையாளம் காண்பித்து அதனை பெற்றுக் கொள்ள முடியும் என காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

No comments