மாலதீவிலிருந்து தனியார் விமானத்தில் சிங்கபூர் செல்லக் காத்திருக்கும் கோட்டா!


சிறீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவின் தலைநகர் மாலேயில் இருந்து சிங்கப்பூர் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் சிங்கப்பூர் செல்லவில்லை என்று கூறப்பட்டுள்ளது.  அதற்குப் பதிலாக இப்போது தனியார் விமானத்தில் பயணிக்கக் காத்திருக்கிறார் என கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராஜபக்சேவும் அவரது மனைவி அயோமா ராஜபக்ஷவும் அவர்களது இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளுடன் SQ437 விமானத்தில் மாலேயில் இருந்து சிங்கப்பூருக்கு புதன்கிழமை இரவு சிங்கப்பூர் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டதாகவும் ஆனால் பாதுகாப்புக் காரணங்களால் விமானத்தில் ஏறவில்லை என்றும் மாலத்தீவு வட்டாரங்கள் தெரிவித்தன.

மாலத்தீவில் இருந்து சிங்கப்பூர் செல்வதற்காக இலங்கை ஜனாதிபதிக்கு தனி விமானம் ஒன்றை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் தற்போது பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன என அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

No comments