பிடிபட்டனர் சைக்கிள் திருடர்கள்


முல்லைத்தீவு மாந்தை கிழக்கில் நீண்ட நாட்களாக இடம்பெற்ற சைக்கிள் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர், இன்று செவ்வாயக்கிழமை (05) கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து சைக்கிள்கள் 03 மற்றும் தண்ணீர் பம்பிகள் 05 ஆகியனவும் மீட்கப்பட்டுள்ளதாக, நட்டாங்கண்டல்  பொலிஸார் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு, நட்டாங்கண்டல்  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் சைக்கிள்கள் மற்றும் தண்ணீர் பம்பிகள் திருட்டில்  ஈடுபட்டு, அவற்றை விற்பனை செய்துவந்த நபரொருவர், மளிகை கடையில் நின்ற சைக்கிள் ஒன்றை திருட முன்பட்ட  வேளை பொதுமக்களால் பிடிக்கப்பட்டு, நையப்புடைக்கப்பட்ட பின் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.  

நட்டாங்கண்டல் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி  ரட்ன நாயக  தலைமையிலான  குழுவினர் விசாரணை  நடவடிக்கையில் ஈடுபட்டு, பிரதேச பொதுமக்களின் ஒத்துழைப்புடன் மேற்படி கைது நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

முன்னதாக கைதுசெய்யப்பட்டவருடன் தொடர்புடைய மாந்தை கிழக்கு பகுதியைச்  சேர்ந்த மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்களை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக  நட்டாங்கண்டல்  பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

No comments