அழைத்து வந்தவரே போகச்சொல்கிறார்!



ராஜபக்ச குடும்பம் தொடர்ந்தும் அவர்கள் ஆட்சியில் இருப்பது, தற்போதைய துரதஸ்டமான சூழ்நிலையில் இருந்து நாட்டை விடுவிப்பதற்கு மிகப் பெரிய தடையாக உள்ளதாக கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் ஆட்சியில் இருப்பதற்கு ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் தார்மீக உரிமை இல்லை . எனவே, நாட்டில் ஏற்பட்டுள்ள அவல நிலைக்கு பொறுப்பேற்று பதவிகளை இராஜினாமா செய்து நாட்டின் எதிர்காலத்தை மக்களிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுப்பதாகவும் பேராயர் குறிப்பிட்டுள்ளார்.  

அதன்பின்னர், மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த இடைக்கால சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கலாம் என்று கூறிய பேராயர், நாட்டில் நிலைமை சீரடைந்தவுடன் விரைவில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும், இந்த நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்க அனைத்து எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களும் முன்வர வேண்டுமென கேட்டுக் கொள்வதாகவும் பேராயர் தெரிவித்துள்ளார்.


No comments