பசில் ராஜபக்ச விமான நிலையம் ஊடாக தப்பிக்க முயற்சி!!


முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ பட்டுப்பாதை பயணிகள் அனுமதி முனையத்தின் ஊடாக நாட்டை விட்டு வெளியேற மேற்கொண்ட முயற்சி, பயணிகளின் எதிர்ப்பை அடுத்து விமான நிலைய குடிவரவு அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்க மறுத்ததால் முறியடிக்கப்பட்டது.

டுபாய் செல்வதற்காக முன்னாள் அமைச்சர் நேற்று நள்ளிரவு 12.00 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்ததாக குடிவரவு குடியகழ்வு அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பசில் ராஜபக்ஷவுக்காக முன்பதிவு செய்யப்பட்ட விமானம் இன்று அதிகாலை 3.15 மணிக்கு டுபாய் செல்லவிருந்தது.

எனினும், பசில் ராஜபக்ச வெளியேறுவதற்கு குடிவரவு அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர். பின்னர், இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் சங்கம் (SLIEOA) நேற்று இரவு முதல் பட்டுப்பாதை பயணிகள் அனுமதி முனையத்தில் செயற்படுவதிலிருந்து விலக தீர்மானித்துள்ளது.

அதனாதல் வெளிநாடு செல்ல பசில் ராஜபக்ச திரும்பிச் செல்ல நேரிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள அரசியல் பிரமுகர்கள், நாட்டிலிருந்து வௌியேறுவதற்காக சேதமாவத்த அதிதிகளுக்கான நுழைவாயிலை பயன்படுத்துவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதன் காரணமாக அந்த பகுதியில் சோதனை நடவடிக்கையிலிருந்து விலகியுள்ளதாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் கணுகல தெரிவித்துள்ளார்.

இதனிடையே இலங்கை விமானப்போக்குவரத்து சபை தலைவராக முன்னாள் யாழ்.மாவட்ட இராணுவ தளபதியும், வடமாகாண ஆளுநருமான சந்திரசிறி நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments