சி.வி ரணில் பக்கமா?ஜனாதிபதி தேர்தலில் டலஸ்-ரணில் பெறும் வாக்குகள் அண்மித்துள்ள நிலையில் நடுநிலை வகிப்பதாக சொல்லிக்கொள்ளும் தரப்புக்களது வாக்குகளே தீர்க்கமிக்கவாகியுள்ளன.

இந்நிலையில் நடுநிலை பற்றி பேசிவந்த தமிழ் மக்கள் சார்பில் 6 கோரிக்கைகள் அடங்கிய கடித மொன்று  தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனினால்  இன்று பதில்  ஜனாதிபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான ரணில் விக்கிரமசிங்கவிடம்  கையளிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு சாதகமாக ரணில் பதிலளித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அவரது ''நடுநிலைமை'' என்ற தனது முடிவு மாற்றமடையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது தொடர்பில் பங்காளிக் கட்சித் தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதன் அடிப்படையில் அவரது முடிவு அமையுமென தெரிகிறது.

சி.வி.விக்கினேஸ்வரனின் ஒற்றை வாக்கும் தாக்கம் செலுத்துகின்ற நிலையில் முன்னணியின் இரட்டை வாக்குகள் பெறுமதியாகியுள்ளது.


No comments