தொடரும் அமைச்சர்களின் பதவி விலகல்: பிரதமர் பதவியைத் தொடர்வேன் என்கிறர் பொறிஸ்


பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் தொடர்ந்து பதவி விலகி வருகின்றனர். நேற்று முன்தினம் சுகாதார அமைச்சர் மற்றும் நிதியமைச்சர் பதவி விலகிய நிலையில் மேலும் இரண்டு அமைச்சர்கள் பதவி விலகியுள்ளனர்.

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான, ஆளும் பழமைவாத கட்சியின் துணை கொறடா கிறிஸ் பின்ஷர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, நிதி அமைச்சரான ரிஷி சுனக் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித் பதவி விலகியிருந்தனர். அவர்களைத் தொடர்ந்து, தற்போது கல்வித்துறை அமைச்சர் , போக்குவரத்து துறை இணை அமைச்சர் லாரா ட்ரோட்டும் பதவி விலகியுள்ளனர்.


பதவி விலகி பிரதமருக்கு அழுத்தும் கொடுத்துவரும் நிலையில் எந்தவித அழுத்தம் வந்தாலும் பிரதமர் பதவியைத் தொடர்வேன் என நாடாளுமன்றில் உறுப்பினர்களிடம் கூறினார்.

கேபினட் அமைச்சர்கள் குழு ஒன்று நேற்றுப் புதன்கிழமை மாலை ஜோன்சனை அவரது டவுனிங் ஸ்ட்ரீட் அலுவலகத்தில் சந்தித்து அவரைப் பதவி விலகச் செய்ய அழுத்தம் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக பிரிட்டிஷ் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

போக்குவரத்து அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸ் மற்றும் நீண்டகால விசுவாசியா பிராண்டன் லூயிஸ் ஆகியோர் பிரதமரைப் பதவி விலக வேண்டும் என்று கோருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

No comments