குருந்தூர் மலைக்கு ஒன்று;வவுனியாவிற்கு இன்னொன்று!



குருந்தூர்மலையில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட விகாரையினை பிக்குகளிற்கு அஞ்சி அகற்றமுடியதிருப்பதாக இலங்கை காவல்துறை நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

விகாரை அமைத்து படையினர் பாதுகாப்புடன் தங்கியிருக்கின்ற பிக்குகளை கண்டு அஞ்சும் காவல்துறை நீதிமன்ற கட்டளையை நிறைவேற்றமுடியாதிருப்பதாக தெரிவித்துள்ளது.

இதனிடையே  வவுனியா நெளுக்குளம் நான்காம் கட்டை பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றையதினம் மதகுரு ஒருவரை பொலிஸ் தாக்கியதாக தெரிவித்து மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொலிஸ் பொறுப்பதிகாரியின் இந்த செயலை கண்டித்து அங்கு நின்ற மக்கள் வவுனியா மன்னார் பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு தாக்கப்பட்ட மதகுருவிடம் பொலிஸ் பொறுப்பதிகாரி மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இதனால் அங்கு பதற்ற நிலைமை காணப்பட்டதோடு நீண்ட நேரமாக வவுனியா - மன்னார் பிரதான வீதியின் போக்குவரத்தும் ஸ்தம்பிதம் அடைந்திருந்தது. 

இதனை தொடர்ந்து குறித்த இடத்திற்கு வருகை தந்த பொலிஸ் பொறுப்பதிகாரி தாக்கப்பட்ட மதகுருவிடம் மன்னிப்பு கேட்டதை அடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

No comments