டலஸ் பெயரை சஜித் முன்மொழிந்தார்?இலங்கையின் புதிய ஜனாதிபதி தெரிவுக்கான ஜனாதிபதி வேட்பாளர்கள் மூவரின் பெயர்கள் இன்று பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்டன.

அதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவின் பெயரை எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிய, அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அதனை வழிமொழிந்தார்.

அதேப்போல் ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் அமைச்சர் தினேஸ் குணவர்தணவால் முன்மொழியப்பட்டதுடன் அதனை அமைச்சர் மனுஷ நாணயக்கார வழிமொழிந்தார்.

மேலும் மற்றுமொரு வேட்பாளரான பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்கவின் பெயரை விஜித ஹேரத் எம்.பி முன்மொழிந்ததுடன்,அதனை ஹரினி அமரசூரிய வழிமொழிந்தார்.

இதேவேளை நாளை காலை 10 மணி வரை பாராளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

No comments