மீண்டும் யாழில் கொரோனா மரணம்!பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வயோதிபர் ஒருவர் இன்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். நெல்லியடி கிழக்கைச் சேர்ந்த 94 வயதுடைய வயோதிபரே உயிரிழந்துள்ளார். 

குறித்த நபர் முதுமை காரணமாக சளி மற்றும் தொற்றா நோயால் பாதிக்கப்பட்ட  நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த 21ம் திகதி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த நபரின் மாதிரி எடுக்கப்பட்ட போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இன்று சனிக்கிழமை குறித்த நபர் உயிரிழந்துள்ளார்

No comments