சர்வகட்சி:ஜக்கிய மக்கள் சக்தியினுள் குழப்பம்!ரணிலின் சர்வகட்சி அரசாங்கத்தில் இணைவது தொடர்பில் ஜக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே கடும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

அனைத்துக் கட்சி ஆட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்ற கருத்து பெரும்பாலான குழுவில் உள்ளது.

அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிரான சர்வகட்சி அரசாங்கத்திற்கு தமது கட்சி ஆதரவளிக்காது என கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஆனால் நாடு நெருக்கடியான சூழ்நிலையில் இருப்பதால் இந்த நேரத்தில் சர்வகட்சி ஆட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பதே கட்சியின் பெரும்பான்மையானவர்களின் கருத்தாக உள்ளது.

இந்நிலையில் ஒரு பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறி அமைச்சு பதவிகளை ஏற்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.


No comments