கரு ஜயசூரிய ரணிலை நம்புகிறார்!இலங்கையில் 19வது திருத்தத்தை அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாகவும், அடுத்த சில வாரங்களில் அதனை அமுல்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமரும் நீதி அமைச்சரும் தமது அமைப்புக்கு அறிவித்துள்ளதாக ‘நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கம்’ அமைப்பின் அழைப்பாளர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

‘நீதியான சமூகத்திற்கான தேசிய இயக்கம்’ மற்றும் ‘தேசிய மற்றும் மத நல்லிணக்கத்திற்கான ஒன்றியம்’ இணைந்து ஏற்பாடு செய்திருந்த “நல்ல நாட்டிற்கான புதிய அரசியலமைப்பு” என்ற தலைப்பில் நடைபெற்ற காலி மாவட்ட மாநாட்டில் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாடு அழிவு நோக்கி சென்றுள்ள இந்த துரதிஷ்டமான நேரத்தில், நமக்குள் இருக்கும் பல்வேறு கருத்து வேறுபாடுகளை விட்டுவிட்டு, கைகோர்த்தால் நாட்டைக் காப்பாற்ற முடியும் என்று உறுதியாக நம்புவதாகத் அவர் தெரிவித்தார்.

தற்போதைய நெருக்கடிக்கு தீர்வாக சர்வகட்சி அரசாங்கமொன்றை நிறுவி குறிப்பிட்ட மற்றும் தெளிவான வேலைத்திட்டத்தை குறிப்பிட்ட காலத்திற்கு அமுல்படுத்த வேண்டும் எனவும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அடிப்படை அடித்தளத்தை ஸ்தாபிக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments