ரணிலின் சிறை நிரப்பு போராட்டம் உக்கிரம்!இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் அத்துமீறி நுழைந்து அச்சுறுத்தல் விடுத்தார் என்று குற்றம் சுமத்தப்பட்ட டனிஸ் அலியை எதிர்வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

டுபாய் நோக்கி புறப்பட இருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் அவர் கைது செய்யப்பட்ட்டார்.

அவரை, நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், ஓகஸ்ட் 1ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments