மின்வெட்டு,இந்தியாவிடம் மீண்டும் கையேந்துகிறது இலங்கைபொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் கூற்றுப்படி, டீசல் மற்றும் எரிபொருள் எண்ணெயைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் பல மின் உற்பத்தி நிலையங்களின் எரிபொருள் இருப்பு ஒரு சில நாட்களுக்கு மட்டுமே போதுமான அளவு குறைந்துள்ளது.

மேற்படி ஆணைக்குழு நேற்று (01) வெளியிட்ட குறிப்பின்படி, சோஜிட்ஸ் ஆலை மற்றும் மாத்தறை  ஆலைக்கு சொந்தமான எரிபொருள் இருப்புக்கள் நேற்றைய தினம் ஏற்கனவே தீர்ந்துவிட்டன.

மேலும் பல மின் உற்பத்தி நிலையங்களில் இன்று எரிபொருள் தீர்ந்து போகவுள்ளதுடன் சபுகஸ்கந்த ஏ, சபுகஸ்கந்த பி மற்றும் பார்ஜ் ஆகியவற்றில் மாத்திரமே இன்னும் மூன்று நாட்களுக்கு போதுமான எரிபொருள் உள்ளது.

நுரைச்சோலை நிலக்கரியில் இயங்கும் அனல்மின்நிலையத்தில் வரும் அக்டோபர் வரை போதுமான நிலக்கரி இருப்பு உள்ளது, ஆனால் ஆலையின் மூன்று ஜெனரேட்டர்களில் ஒன்று அத்தியாவசிய பராமரிப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளதால், கொள்ளளவு 540 மெகாவாட்டாக குறைந்துள்ளது.

அதன்படி, இன்று ஐஓசி நிறுவனத்திடம் இருந்து டீசல் கையிருப்பு பெற முடிந்தால் மட்டுமே பெரிய அளவில் மின்வெட்டை தவிர்க்க முடியும் என வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments