கலைகிறது ஆதரவு:பேசித்தீர்க்க சொல்லும் மைத்திரி!இலங்கைக்கு சர்வதேசத்தின் ஆதரவு எதிர்பார்க்கப்படும் வேளையில் அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்வது நாட்டின் எதிர்காலத்தை பாதிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ முகநூல் கணக்கில் வெளியிட்டுள்ள குறிப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

போராட்டப் பகுதியில் உள்ள போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடல் மற்றும் ஒருமித்த கருத்து மூலம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டால் அது சிறந்தது என்றும் அவர் கருத்துத்தெரிவித்துள்ளார்.

No comments