கடலில் மிதந்த கஞ்சா:கைதுகள் தொடர்கிறது!



கடலில் மிதந்த கஞ்சாவை எடுத்துச் சென்று உள்ளூரில் விற்பனையில் ஈடுபட்டவர்கள் இராமேஸ்வரத்தில் கைது செய்யப்பட்டனர்.

இந்தியாவில் இருந்து  கடத்திய கஞ்சாப்பொதிகளை இலங்கை கடற்படையினரைக் கண்டதும் கடலில் தூக்கி எறிந்துவிட்டு இந்திய மீனவர்கள் தப்பி ஓடி விட்டனர். இவ்வாறு கடலில் போடப்பட்ட பொதிகள் அலையின் காரணமாக இந்தியத் திசை நோக்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

இவ்வாறு கடலில் மிதந்த  கஞ்சாவினை இராமேஸ்வரத்தில் இருந்து கடற்றொழிலிற்கு வந்த பிறிதொரு படகில் பயணித்த மீனவர்கள் அவதானித்து அதனை எடுத்துச் சென்று சிறிது சிறிதாக பொதி செய்து  விற்பனை செய்ய முயன்ற சமயம் ஒருவர் கைது செய்யப்பட்டதோடு 30 கிலோ கஞ்சாவும்  கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேநேரம் இந்த கஞ்சாவை கடலில் இருந்து  எடுத்த சமயம் மீனவப் படகில் 7 மீனவர்கள் இருந்தமையினால் எஞ்சிய ஆறு மீனவர்களையும் தேடி வருவதாகவும் கூறப்படுகின்றது.

No comments