இலங்கை அமைச்சர்கள் ஆடையின்றி?எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பாதுகாப்பு தரப்பினரும் பொதுமக்களும் சண்டையிட்டுக் கொள்வதாக தெரிவிக்கும் எதிர்க்கட்சி , அரசாங்கம் வேண்டுமென்றே பாதுகாப்பு தரப்பினருக்கும் பொது மக்களுக்கும் இடையிலான மோதலை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் அமைச்சர்கள் அனைவரும் ஆடையணிந்து இருப்பதாக எண்ணிக் கொண்டாலும் அவர்கள் அனைவரும் நிர்வாணமாகவே இருக்கிறார்கள். விவசாயிகள் மட்டுமல்ல நாட்டில் உள்ள அனைவரும் பிச்சைக்காரர்களாகியுள்ளனர்.நாட்டிலுள்ள அனைத்து மீனவர்களுக்கும் மண்ணெண்ணையை வழங்குவதற்கான எந்த விதமான திட்டங்களும் முன்னெடுக்கப்படுவதாக தெரியவில்லை. 1500 ரூபாய்க்கும் அதிகமான விலை கொடுத்தே மண்ணெணெய்யை பெற்றுக்கொள்ளும் நிலை மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

பாதுகாப்பு தரப்பினரும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அடித்துக் கொள்கிறார்கள். இந்த மோதல் நிலையை அரசாங்கம் திட்டமிட்டு உருவாக்கி இருக்கிறது. அதேபோல்  எரிபொருள் நிரப்பு நிலையங்களை விற்பனை செய்வதற்கும் அரசாங்கம் முயன்று வருகிறது எனவும் தெரிவித்துள்ளது.

No comments