ராஜபக்சே விரும்பினால் இராணுவ உதவியை இந்தியா வழங்க வேண்டும் - சுப்பிரமணியன் சுவாமி


இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவி வழங்க வேண்டும் என்று இந்தியாவின் ராஜ்யசபா நாடாளுமன்ற உறுப்பினரும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவருமான டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

சுப்பிரமணியன் சுவாமி இலங்கை அரசியலை நன்கு அறிந்தவரும், ராஜபக்சே குடும்பத்தின் நெருங்கிய நண்பர்.

சட்டப்பூர்வமான தேர்தலை ஒரு கும்பல் கவிழ்க்க இந்தியா எப்படி அனுமதிக்கும் என்று ரேவிட்டரில் கேள்வி எழுப்பினார்.

 கோட்டாபய மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகிய இருவருமே சுதந்திரமான தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அத்தகைய ஒரு  சட்டபூர்வமான தேர்தலை ஒரு கும்பல் கவிழ்க்க இந்தியா எப்படி அனுமதிக்கும்?எமது சுற்றுப்புறத்தில் உள்ள எந்த ஒரு ஜனநாயக நாடும் பாதுகாப்பாக இருக்காது. இந்தியாவின் இராணுவ உதவியை ராஜபக்சே விரும்பினால் நாங்கள் வழங்க வேண்டும் என்று அவர் ட்வீட் செய்துள்ளார்

No comments