கடிதம் தரவில்லை:வெளிவந்தது போலியே!


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது இராஜினாமா கடிதத்தை இன்னும் சமர்ப்பிக்கவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை அவரது பெயரில் வெளிவந்துள்ள கடிதம் போலியானதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலில் ஜனாதிபதி தனது இராஜினாமா கடிதத்தை நள்ளிரவுக்கு முன்னர் கையளிப்பதாக அறிவித்ததாக சபாநாயகர் தெரிவித்தார். 

தனக்கும் அழுத்தங்கள் இருப்பதாகக் கூறி, தனது இராஜினாமா கடிதத்தை விரைவில் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதிக்கு அறிவித்ததாக சபாநாயகர் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் கிடைக்கப்பெறாவிட்டால், அவர் பதவியை விட்டு விலகியதாக கருதி மேற்கொள்ளவுள்ள சட்ட ஏற்பாடுகள் தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments