பட்டினிச் சாவில் இருந்து மக்களை காப்பீர்!யாழில்   “பட்டினிச் சாவில் இருந்து மக்களை காப்பீர்” என்ற தொனிப்பொருளில் மாபெரும் கையெழுத்து போராட்டம் ஒன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டமானது தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையினால் யாழ். பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் முன்னெடுக்கப்பட்டது.

பதுக்கல் மற்றும் கொள்ளை இலாபங்களில் இருந்து மக்களை பாதுகாக்க கட்டுப்பாடு விலைகளை நடைமாறைப்படுத்தி இறுக்கமாக செயற்பட வேண்டும்.

மருந்து, மருத்துவப் பொருட்கள் ஆகியவற்றின் மீதான விலையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுத்தல் மற்றும் மாவட்ட அரச பொது மருத்துவமனைகளுக்கு தடையின்றி மருந்துகளை வழங்க நடவடிக்கை எடுத்தல்

நீண்ட வரிசையில் மக்களை நிற்க வைக்காமல் அதற்குரிய இலகு பொறிமுறை ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.

விவசாயம், கடற்தொழில், சுகாதாரத்துறை போன்றவற்றில் கடமை புரிபவர்களுக்கு தடையில்லாமல் எரிபொருளை வழங்க வேண்டும்.

பசி, பட்டினி சாவினை தவிர்க்க வீட்டுத்தோட்டம், சமூக தோட்டங்களை உருவாக்க அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் உடனடியாக சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என கூறி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

No comments