ஓட்டமாவடி:யானை தாக்கி மரணம்!ஓட்டமாவடி - ஒட்டுவெளி வயல் பகுதியில் வயல் காவலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபர் ஒருவர் யானை தாக்கி மரணமடைந்துள்ளார். 

இந்த சம்பவம் நேற்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

வேளாண்மை அறுவடை நடைபெற்றுக் கொண்டிருந்த போது வயல் காவலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை, அப்பகுதிக்கு வந்த நான்கு யானைகளை குறித்த நபர் விரட்டிய போது அதில் ஒரு யானை தாக்கியுள்ளது. 

இவ்வாறு யானையின் தாக்குதலுக்குள்ளான நபர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

யானை தாக்குதலில் உயிரிழந்த நபர் ஓட்டமாவடி - 3 ஆம் வட்டாரம் பரிகாரியார் வீதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 65 வயதுடைய முகம்மது முகைதீன் அகமது லெப்பை என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். No comments