பதுங்கியுள்ள இடம் ஏது?

 


இலங்கை ஜனாதிபதி கோத்தபாய பதுங்கியுள்ளதாக நம்பப்படும் இராணுவ தலைமையகத்தில் பாதுகாப்பு செயலாளர் மற்றும் மேல்மாகாண பொலிஸ் மா அதிபர் ஆகியோர் தங்கியிருந்து கோத்தபாயவின் கட்டளைகளை பிறப்பித்துவருகின்றனர்.

குறிப்பாக கட்டுநாயக்க பிரதேசத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்தே இந்த உத்தரவுகளை வழங்குவதாக பொலிஸ் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதனிடையே மேல்மாகாண பிரதான பொலிஸ் மா அதிபர் இன்று (10 ம் திகதி) மேல் மாகாணத்தின் அனைத்து பொலிஸ் மா அதிபர்களையும் சூம் (ணுழழஅ) தொழில்நுட்பத்தின் ஊடாக தொடர்பு கொண்டு, கொழும்பின் பாதுகாப்பை மீண்டும் பாதுகாப்பு வீதித் தடைகளுடன் பலப்படுத்துமாறு பணிப்புரை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் தற்போது ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையை ஆக்கிரமித்து போராட்டம் நடத்துபவர்கள் தொடர்பில் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பதுங்கியுள்ள கோத்தபாய கப்பலில் வந்தடைந்துள்ள விவசாய உரங்களை விநியோகிக்க கோத்தபாய பணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments