கொழும்பு:காயமடைந்தவர்களை மீட்க மறுத்த அம்புலன்ஸ்

ரணில் ராஜபக்சவின் பணிப்பினையடுத்து காயமடைந்தவர்களை அவசர அம்புலன்ஸ் சேவை மீட்கமறுத்தமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

சுவசெரிய அம்புலன்ஸ் வண்டிகளுக்கு சேதம் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காகவும், மக்கள் நன்மையைக் கருத்தில் கொண்டும், கோட்டகோகமவில் காயமடைந்தவர்களிடமிருந்து அம்புலன்ஸ் சேவைக்கான அழைப்புகளை நிராகரித்ததாக, சுவசேரிய தலைவர் துமிந்திர ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (22) காலை செய்தியாளர்களிடம் பேசும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“எங்களுக்கு கோட்டகோகமவில் சிலர் காயமடைந்துள்ளதாக முதல் அழைப்பு வந்தது. காயமடைந்த நபரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல எங்களால் அம்புலன்ஸ் அனுப்பப்பட்டது. அந்த நபர் ஒரு பத்திரிகையாளர். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதை நாங்கள் உறுதி செய்தோம். அதன்பிறகு, கோட்ட கோ கமவிலிருந்து எங்களுக்கு பல அழைப்புகள் வந்தன, துரதிர்ஷ்டவசமாக சுவசேரிய சேவை அவற்றை நிராகரிக்கும் முடிவை எடுக்க வேண்டியிருந்தது.

காயமடைந்தவர்களை தடுப்பு பகுதியில் இருந்து வெளியே கொண்டு வராத வரையில், எங்களால் சேவைகளை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, அழைப்பு விடுத்த நபர்களிடம் தெரிவித்தோம்” என ரத்நாயக்க தெரிவித்தார்.


மக்களின் நன்மை கருதி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

நாங்கள் தினமும் 1600 நோயாளிகளுக்கு சேவை செய்கிறோம். ஒரு அம்புலன்ஸ் சேதமடைந்தால், 50 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு எங்களை சேவை வழங்க முடியாமல் போகும் , மேலும் பொதுமக்களின் கோரிக்கைகளை எங்களால் பூர்த்தி செய்ய முடியாது. எங்களுக்கு எந்த அரசியல் சார்பும் இல்லை, தேசத்திற்கு சேவை செய்ய மட்டுமே நாங்கள் அழைக்கப்பட்டுள்ளோம், ”என்று அவர் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் ஆம்புலன்ஸ் சேவை வழங்கும் இலவச சேவையானது கோட்டா கோ கம போராளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததாகவும் அவசர மருத்துவ சேவை மறுக்கப்பட்டதாகவும் சமூக ஊடகங்களில் பல பதிவுகள் பகிரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

No comments