பிரித்தானியாவில் ஈருறுளிக்கு அருகில் வாகனத்தை ஓட்டியத்துக்கு £1,800 அபராதம்!

பிரித்தானியாவில் மகிருந்து ஓட்டுநர் ஒருவர் ஈருறுளிக்கு அருகாமையில் வாகனத்தை ஓட்டிச்சென்றதால் அவருக்கு £1,800 அபராதம் விதிக்கப்பட்டது. 

77 வயதான வெய்ன் ஹம்ப்ரீஸ் என்ற வாகன ஓட்டுநர் ஆடி கீ8 (Audi Q8) மகிழுந்தில் ஈருறுளி ஓட்டுநருக்கு போதுமான இடம் விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து ஓட்டியதால் அவருக்கு £1,800 அபராதம் விதிக்கப்பட்டதுடன் அவரின் வாகன ஓட்டுநர் அனுமதி அட்டையிலிருந்து 4 புள்ளிகளும் தண்டனையாக எடுக்கப்பட்டது.

இதற்காக 77 வயதான வெய்ன் ஹம்ப்ரீஸ் ஓட்டுநர் விழிப்புணர்வு பாடத்திட்டத்தில் கலந்துகொள்ள சந்தர்ப்ம் அளிக்கப்பட்டது. ஆனால் அவர் அதையும், அபராத்தைத் செலுத்த மறுத்துவிட்டார். அவர் இந்த அபராதம் பயங்கரமானது என விபரித்துள்ளார்.

ஈருறுளி ஓட்டுபவர் ஒரு கோ புறோ( GoPro) கேமராவில் நெருங்கிய செல்வதைப் பதிவுசெய்து  சம்பவத்தை வீதிக்கால்துறையினரிடம் புகாரளித்தார்.

கார்டிஃப் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஜூன் 8 அன்று கவனம் இல்லாமல் வாகனம் ஓட்டியதற்காக வழக்கு தொடரப்பட்டது. வருக்கு £ 1,152 அபராதம் விதிக்கப்பட்டது மற்றும் £ 620 செலவுகள் மற்றும் £ 115 பாதிக்கப்பட்டவருக்கு வழங்க உத்தரவிடப்பட்டது. அத்துடுடன் அபராதம் மற்றும் செலவுகளில் £1,887 செலுத்த உத்தரவிட்டார்.

அபராதம் முற்றிலும் பயங்கரமானது. எனக்கு 77 வயது ஆகிறது, கடைசியாக எனக்கு விதிக்கப்பட்ட அபராதம் 35 முதல் 40 ஆண்டுகளுக்கு முன்பு. அதைத் தவிர நான் ஒருபோதும் அபராதம் செலுத்தவில்லை. 60 ஆண்டுகளாக உரிமம் பெற்றுள்ளேன் என்றார் வெய்ன் ஹம்ப்ரீஸ்.

No comments