மேலே ஒரு கனதியான பயணம்

 


இலங்கையில் தீவிரமாக தொடரும் எரிபொருள் நெருக்கடியால் , தினசரி வேலைக்காக செல்வது பெரும்பாலானவர்களுக்கு சவாலாக மாறியுள்ளது. வீதிகளில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பேருந்துகள் இயக்கப்படுவதால், மக்கள் அடுத்த சிறந்த போக்குவரத்து மார்க்கமாக ரயிலை தேர்வு செய்துள்ளனர்.

குறிப்பாக தனியார் பேரூந்து சேவைகள் முற்றாக நின்றுள்ளன.மோட்டார் சைக்கிளிற்கான எரிபொருட்கள் இல்லையென்றாகிவிட்டது.

இந்நிலையில் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில்  ரயில்கள் நிரம்பி வழிகின்றன. வேறு வழியின்றி மக்கள் சில நேரங்களில் ரயில் என்ஜிலும் ரயில் பெட்டிகளின் மேலும் பயணம் செய்கிறார்கள்.

இந்தப்பயணம் மிக ஆபத்தானது. உயிருக்கு உத்தரவாதமற்றது. ஆனால் இவர்களுக்கு வேறு வழியில்லை. பயணிகளின் இந்த ஆபத்தான பயணங்கள் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் இந்தியா மற்றும் பங்களாதேசிற்கு போட்டியாக வைரலாகி வருகின்றன.No comments