இலங்கையில் அதிகரிக்கும் வறுமை மரணங்கள்!

 


இலங்கையில் வறுமை காரணமாக தற்கொலை மரணங்கள் அதிகரித்துள்ளன.

வத்தளை – கதிரான பாலத்திற்கருகில் தமது பிள்ளையை களனி கங்கையில் வீசி, தாமும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரதேச மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். களனி கங்கையில் வீசப்பட்ட 5 வயது பிள்ளையைத் தேடும் பணிகளில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

வத்தளை – ஹெந்தல பகுதியைச் சேர்ந்த 42 வயதான தாயொருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட குறித்த பெண் இன்று வெலிசறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வறுமை காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக தெரியவந்துள்ளது.


No comments