திருகோணமலையில் குழுக்களிடையே மோதல்: ஐவர் காயம்!


திருகோணமலை - குச்சவெளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட சாகரபுர பகுதியில் 2 குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

அவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை குச்சவெளி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments