மட்டக்களப்பில் இளைஞர் மர்மமான முறையில் மரணம்


மட்டக்களப்பு  காத்தான்குடி நாவற்குடாவில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் மரணமான முறையில் இறந்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் கூலிவேலைக்குச் சென்று வீடு திரும்பிய இளைஞர் அம்மாவிடம் குளிர்பானம் வாங்கி அருந்தி விட்டு தனது வீட்டுத் தோட்டத்திலுள்ள பயிர்களுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டு நின்றுள்ளார்.

அவ்வேளையில், அம்மாவிடம் பீடி வாங்கி வருமாறு  கூற அம்மா கடைக்கு பீடி வாங்கச் சென்று திரும்பி வந்து பார்க்கையில் குறித்த நீர் ஊற்றிய இடத்திலேயே மூச்சின்றி இறந்து காணப்படதாக மரணமானவரின் தாய் தெரிவித்தார்.

உயிரிழந்தவர் 31வயதுடைய ஆனந்தன் ஜெயராஜ் என அடையாளம் காணப்பட்ட நிலையில், காத்தான்குடி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments