யேர்மனியில் தொடருந்து தடம் புரண்டது: மூவர் பலி! மேலும் பலர் காயம்!


தெற்கு யேர்மனியின் பவேரியாவில் பிராந்திய தொடருந்து தடம் புரண்டதில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

அல்பைன் ஸ்கை ரிசார்ட் நகரமான கார்மிஷ் - பார்டென்கிர்சென் அருகே உள்ள பர்கிரேனில் இன்று வெள்ளிக்கிழமை 12:15 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது. தொடருந்து முனிச் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

விபத்தில் தொடருந்துப் பெட்டிகள் தலைகீழாக கவிழ்ந்தது. தரையில்  உருண்டு விழுந்ததை காட்சிகளைப் படங்கள் காட்டுகின்றன.

தொடருந்தில் எத்தனை பேர் இருந்தனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

தடம் புரண்டதற்கான காரணம் ஆராயப்பட்டு வருகிறது. மேலும் பெரிய மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கார்மிஷ்-பார்டென்கிர்சென் மற்றும் ஒபராவ் இடையேயான தொடருந்து  பாதை விபத்து நடந்த இடத்திற்கு வடக்கே மூடப்பட்டது.

No comments