ரஷ்யத் தாக்குதலில் சக்தி வாய்ந்த வெடிப்புகள் கியேவை உலுக்கின


ரஷ்ய Tu-95 மூலோபாய குண்டுவீச்சு போர் விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காஸ்பியன் கடலில் இருந்து உக்ரைனின் தலைநகர் கிய்வ் மீது ஏவுகணைகளை ஏவியதுடன் உக்ரேனிய தலைநகரின் கிழக்கு மாவட்டங்களில் இரண்டு தாக்கதல்களால் அதிர்ந்தன என்று உக்ரைனின் விமானப்படை மற்றும் நகர முதல்வர் தெரிவித்தனர்.

கிய்வில் உள்ள தொடருந்து உள்கட்டமைப்பை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது என்று ஜனாதிபதி வோலோடோமிர் ஜெலென்ஸ்கியின் தலைமை அதிகாரியின் உதவியாளர் செர்ஹி லெஷ்செங்கோ கூறினார். மரணங்கள் எதுவும் உடனடியாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் குறைந்தபட்சம் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று மேயர் விட்டலி கிளிட்ச்கோ கூறினார்.

இலக்கு வைக்கப்பட்டு தாக்கி அழிக்கப்பட்ட இடத்தில் ஆயுதக் கிடங்கு இருந்திருக்கலாம் என உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளியாகியுள்ளன.

தலைநகர் கீவ்வில் டார்னிட்ஸ்கி மற்றும் டினிப்ரோவ்ஸ்கி மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை "பல வெடிப்புகள்" நடந்ததாக கிய்வின் மேயர் விட்டலி கிளிட்ச்கோ கூறுகிறார்.

அத்துடன் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் அவசரகால பணியாளர்கள் திருத்த வேலைகளில் ஈடுபட்டடுள்ளனர் அவர் மேலும் தெரிவித்தார்.


No comments