மறுதலிக்கிறார் ஜீவன்!இந்திய நிவாரணத்தில் தலையீடு தொடர்பில் முன்வைக்கப்பட்ள்ள குற்றச்சாட்டுக்களை ஜீவன் மறுதலித்துள்ளார்.

இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மீது முன்வைத்த குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால், அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்போம் என பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ள மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக, தமிழக அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள அத்தியாவசியப்  பொருள்களை பகிர்ந்தளிக்கும் போது, பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமானின் அழுத்தம் அதிகமாக காணப்படுவதாக இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் நெவில் விஜேரத்ன தெரிவித்துள்ளார்.


கண்டியில் நேற்று (1) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, இக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில், அதற்கு பதிலளிக்கும் முகமாகவே ஜீவன் தொண்டமான் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


அத்துடன் இது தொடர்பில் எழுத்து மூலம்  இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்துக்கு இன்று அறிவிக்கவுள்ளோம் என்றார்.

No comments