உயிரை பணயம் வைத்து மீன்பிடி

 


பட்டினியை போக்க. ஏறாவூர் குடியிருப்பு ஆற்றில், தோணி ஒன்றில் மீன்பிடிக்க சென்ற நபர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இவர் நேற்று இரவு தனியாக மீன் பிடிப்பதற்காக சென்றிருந்த நிலையில், இன்று  காலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், ஏறாவூர் மயிலம்பாவெளி துரைச்சாமி வீதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான சின்னத்துரை சிறீதரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்று மாலை 4 மணிக்கு வீட்டில் இருந்து வெளியேறி மீன்பிடிப்பதற்காக ஆற்றில் தோணியில் தனியாக சென்றுள்ளார்.

இரவாகியும் வீடு திரும்பாததையடுத்து உறவினர்கள் அவரை தேடிய நிலையில் இன்று காலையில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

எரிபொருள் இன்மையால் உயிரை பணயம் வைத்து தொழிலுக்கு சென்று அண்மை நாட்களில் உயிரிழந்த இரண்டாவது மீனவர் இவராவார்.


No comments