தலைகள் இருக்க வேட்டையாடப்படும் வால்கள்!

மே 9 தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம குற்றப் புலனாய்வு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சரணடைந்திருந்த நிலையிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சரணடைந்துள்ளார்.

கடந்த மே மாதம் 09ஆம் திகதி அமைதி போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தச் சென்ற கும்பலில் இருந்ததாக அடையாளம் காணப்பட்ட மஹிந்த கஹந்தகம காலி முகத்திடலில் இடம்பெற்ற சம்பவங்களில் சந்தேகநபராக குறிப்பிடப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சரணடைந்துள்ளார்.

இதேவேளை, மஹிந்த கஹந்தகமவிற்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments