ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு அனுப்பிய டாங்கிகளை ரஷ்யா அழித்தது


ஐரோப்பிய நாடுகளால் உக்ரைனுக்கு வழங்கப்பட்ட யுத்த டாங்கிகள், மற்றும் கவச வாகனங்கள் தாக்கி அழிக்கப்பட்டதாக தாக்குதல்கள் அழித்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது.

இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உக்ரைன் தலைநகரில்  பல பகுதிகளில் ரஷ்ய ஏவுகணைகளினால் அதிர்ந்தது.  இதனை அந்நகரின் முதல்வர் உறுதிப்படுதியிருந்தார்.

உக்ரைனுக்கு அமெரிக்கா நீண்ட தூர ஏவுகணைகளை வழங்கத் தொடங்கினால், ரஷ்யா புதிய இலக்குகளைத் தாக்கும் என்று புடின் மேற்கு நாடுகளுக்கு எச்சரித்துள்ளதாக டாஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்தகைய ஏவுகணைகள் வழங்கப்பட்டால், நாங்கள் இதுவரை தாக்காத இலக்குகளை நாங்கள் தாக்குவோம் என்று அவர் ரொஸ்சியா-1 அரசு தொலைக்காட்சி  அளித்த பேட்டியில் மேற்கோள் காட்டியிருந்தார்.

இதேநேரம் உக்ரேனிய அதிபரின் ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக், கியேவ் மீதான மாஸ்கோவின் ஏவுகணைத் தாக்குதலை "பயங்கரவாதச் செயல்" என்றும், ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடைகளைக் கோரியுள்ளார்.

No comments