ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையுங்கள்: பல்லாயிரக்கணக்கான மக்கள் கோரிக்கை!


ஐரோப்பிய ஒன்றியத்தில் தங்களை இணைக்குமாறு வலியுறுத்தி ஜோர்ஜியாவின் தலைநகர் திபிலிசியில் பல்லாயிரக்காணக்கான மக்கள் ஒன்றுகூடி ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமையை கோரினர்.

ஐரோப்பிய மற்றும் ஜோர்ஜியக் கொடிகளை அசைத்து, சுமார் 60,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜோர்ஜிய நாடாளுமன்றத்தின் முன் கூடி குறித்த கோரிக்கையை முன்வைத்தனர்.

ஐரோப்பிய ஆணையம் ஜோர்ஜியாவின் வேட்பாளர் அந்தஸ்தை வழங்குவதற்கு முன் காத்திருக்குமாறு பரிந்துரைத்த சில நாட்களுக்குப் முன் அறிவித்திருந்தனர். 

ஜோர்ஜியாவிற்கும் உக்ரைன் மற்றும் மால்டோவாவிற்கும் உத்தியோகபூர்வ வேட்பாளர் அந்தஸ்து வழங்கலாமா என்பது பற்றி ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் இந்த வாரம் விவாதிக்க உள்ளதால் இந்த பேரணி ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஒரு சமிக்ஞையை அனுப்பும் நோக்கத்தில் நடத்தப்பட்டது.

ஐரோப்பிய ஆணையம் உக்ரைன் மற்றும் மால்டோவா பற்றி நேர்மறையான கருத்தை தெரிவித்தாலும், அந்தஸ்துக்கு தகுதி பெறுவதற்கு முன்பு ஜோர்ஜியா முதலில் அரசியல் மற்றும் பிற சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று வெள்ளிக்கிழமை கூறியது.

No comments