கொலை அச்சமின்றி புகையிரதத்தில் வந்தார் அமைச்சர்!வீதிகள் எங்கும் எரிபொருளிற்காக மக்கள் அலை மோத கொலை தாக்குதலில் தப்பிக்க அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, புகையிரதத்தில் யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளார்.காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் வரவேற்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் விமானநிலையம், மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்துக்கான சிறப்பு விஜயமொன்றை அங்கஜன் இராமநாதனின் அழைப்பில், துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா மேற்கொண்டுள்ளார். 

கொழும்பிலிருந்து புகையிரதத்தில் வருகைதந்த இருவரும் காங்கேசன்துறை புகையிரத நிலையத்தை வந்தடைந்தனர். 

யாழ்ப்பாணம் விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராயும் முகமாக இவ்விஜயம் இடம்பெற்றுள்ளது.

இதனிடையே டக்ளஸின் அழைப்பில் அவர் வருகை தந்திருந்ததாக ஈபிடிபி அறிவித்துள்ளது.


No comments