அனலைதீவில் கரை ஒதுங்கும் மனித எச்சங்கள்!யாழ் அனலைதீவு கடற்கரையில் மனித எச்சங்கள் கடற்கரையில் கரையொதுங்கியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள அனலைதீவு கடற்கரையில் மனித எச்சங்கள் இவ்வாறு கரையொதுங்கியுள்ளது.

காணாமல் போனவரின் மனித எச்சங்கள் நீண்ட காலத்திற்குப் பின்னர் கரை ஒதுங்கி இருக்கலாம் என  சந்தேகிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, போலீசார் சம்பவ இடத்தை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments