வேட்டையாடப்படும் கஞ்சா விநியோகஸ்தர்கள்!யாழ்ப்பாணத்தின் தீவகத்தில் மீட்கப்பட்ட கஞ்சாவை தொடர்ந்து விநியோகஸ்தர்கள் பலரும் தொடர்ச்சியாக வேட்டையாடப்பட்டுவருகின்றனர்

வடமராட்சி திக்கம் சந்திக்கு அருகாமையில் உள்ள வீடொன்றில் புதைத்து வைக்கப்பட்ட கஞ்சா மற்றும் பணம் என்பன மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் சந்தேகத்தின் பேரில் மூவரை பருத்தித்துறை பொலீஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. திக்கம் திருமண மண்டபத்திற்கு முன்னால் உள்ள வீடொன்றில் புதைத்து வைக்கப்பட்ட ஒரு கிலோ 90 கிறாம் கஞ்சா மற்றும் 40ஆயிரத்து 460 ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளது. கஞ்சாவை மறைத்து வைத்துள்ள குற்றச்சாட்டில் அப்பகுதியைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments