நமுத்துப்போகும் காலிமுகத்திடல்:ரணில் ஆரூடம்!போராட்டத்தை வேறு எங்காவது கொண்டு செல்வதா, இல்லையா என்பதை காலி முகத்திடலில் உள்ளவர்கள் தீர்மானிப்பார்கள்.அரசைப் பொறுத்த வரையில் நாங்கள் போராட்டக்காரர்கள் விடயத்தில் தலையிடப் போவதில்லை. அவர்கள் போராட விரும்பினால், நிச்சயமாக அங்கேயே போராட்டத்தை நடத்தலாம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்திய ஊடகமான என்ரீ டிவிக்கு வழங்கிய நேர்காணலில் தெரித்துள்ளார்.

 அரசுக்கு எதிராக போராடும் இளைஞர்கள் அரசியல் கட்டமைப்புகளுக்குள் வர வேண்டும். உள்ளே வாருங்கள், நாங்கள் அமைத்த குழுக்களில் பங்கு கொள்ளுங்கள், அரசாங்கத்துடனும் மக்களுடனும் உரையாட முடியும் என தம் அழைப்பு விடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அரசாங்கம் வீட்டுக்கு போனால் தேர்தலை நடத்தும் நிலை இல்லை. பொது மக்கள் தற்போது தேர்தலை விரும்பவில்லை என்று தெரிவித்துள்ள பிரதமர் நாட்டில் தேர்தல்கள் 2023 இன் இறுதியில் அல்லது 2024 இன் தொடக்கத்தில் தான் நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.

No comments