தாய்க்கு அரசியல் கைதி அஞ்சலித்தார்!


மத்திய வங்கி குண்டுவெடிப்பின் கீழ் 96ம் ஆண்டு முதல் கடந்த 26  ஆண்டுகளாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதி விக்கினேஸ்வரநாதன் பார்த்தீபன் உறவுகளது கதறல்களிடையே பேரன்புத்தாயார் விக்கினேஸ்வரநாதன் வாகீஸ்வரி (கண்ணாடி அம்மா) அவர்களிற்கு தனது இறுதி கடமைகளை இன்று ஆற்றியிருந்தார்.

சிறைச்சாலை உத்தியோகத்தர்களது கடுமையான பாதுகாப்பு கெடுபிடிகள் மத்தியில் யாழ்ப்பாணத்திற்கு அழைத்துவரப்பட்டு தாயாரிற்கு அஞ்சலி செலுத்த அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.தமிழீழ விடுதலையை நேசித்து தனது மகனிற்கு திலீபனின் இயற்பெயர் சூட்டி தேடிவரும் போராளிகள் அனைவரிற்கும் உணவு ஊட்டிய கண்ணாடி அம்மா  மண்ணறைக்குப் போவதற்குள் தன் பிள்ளைக்கு ஒரு பிடி சோறூட்ட வழிகாட்டையா என நல்லூரானிடம் வேண்டிக்கொண்டிருந்த தாய், இதுவரை தன் பிள்ளையின் திருமுகம் காணாமலே விண்ணுலகை ஏகியிருந்தார்.

அவரது இறுதிக்கிரியைகள் திருநெல்வேலியிலுள்ள அவரது வாசஸ்தலத்தில் இன்று நடைபெற்றிருந்தது.


No comments